இந்த தாவரமாகிய நான், கிராமத்தில் முளைக்க நகரத்தில் நடப்பட்டவன். அதனால் என்னவோ கிராமப்பச்சை என்னுள் கச்சைகட்டிக்கொண்டது என்று நினைக்கிறேன்.
மயில்கள் அகவ அதன்பின் சேவல்கள் கூவ, மாட்டின் கழுத்துமணி
ஓசை கேட்டு, அந்த சூரியன் பனிப்போர்வையை நீக்கி எட்டி யாரென்று பார்க்க, இதுதான் சமயம் என்று சூரிய மஞ்சளை எடுத்து பச்சை புற்கள் பூசிக்கொள்ள, அது
மார்கழி என்றால் பூசணி காலையிலும் நட்சத்திரங்களாக பூத்திருக்க, பூசணி பூப்பதே கன்னிகள் போடும் கோலத்திர்க்காக என அவர்கள் சாணி மெழுகி பூமிக்கு கோலமேனும் ரேகை வரைய......
அதுவரை இரவு முழுவதும் தவளைகளோடும், நத்தைகளோடும் மௌனம் பேசிக்கொண்டிருந்த கண்மாய் கிராமச்சிறார்களால் மௌனம் கலையப்பட,மடத்திலிருந்து வரும் முருகபக்தி பாடல்கள் குழாய்கள் மூலம் குழைய, ஆலமரத்தின்னையில் மனித மூட்டைகள் அன்றைய பொழுதையும் பேசிக்கழிக்க முழிக்க, ஊரின் முதல் நெல்மணி அறுப்பதற்கு கிராம பெண்களின் கை அசையும்முன் நாவசைய குலவை சத்தம் , தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த காளையை திரும்பிப் பார்க்க வைக்க....
சகுணம் இன்றைக்கும் நல்லதாகவே அமைந்துவிட்டது என்று என் ஆத்தா (அப்பத்தா) என்னை எழுப்ப, நான் எழுந்த இடம், எண்-26, பூக்கார தெரு, வடபழனி, சென்னை-26..... ஆம் என்னை எழுப்பிய எண் ஆத்தாவின் கைத்தீண்டல் இத்தனை கிராமிய அசைவுக்குச்சமம் .
பெயர் த.மீனாள் நாச்சியார், இவர்களை பற்றி பேச, எழுத நிறைய இருக்கவே , என் எழுது கோளின் மையை தற்போதைக்கு சேமித்துக்கொண்டு....
கிராமம் நோக்கி வேர்விட ஆரம்பிக்கிறேன்..... வாருங்கள் நீள்கிறேன்
-தொடரும்

No comments:
Post a Comment